சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் கிடையாது - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சுங்கச்சாவடி(மாதிரிப் படம்)

நாவலூர் சுங்கச்சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதுகுறித்த தெளிவான விளக்கம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

 • Share this:
  சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. குறிப்பாக சென்னையின் ஐ.டி ஹப்பாக மாறிய ஓ.எம்.ஆர் சாலை, 2008ஆம் ஆண்டு "IT Express way" வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி கிராமம் வரை 20.1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது.

  மேடு, பள்ளங்கள் இன்றி பளபளக்கும் சாலை, இரவை பகலாக்கும்படியான விளக்குகள், முறையான போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம் அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் சாலையில் 13 ஆண்டுகளாக கட்டண வசூலில் ஈடுபடும் சுங்கச் சாவடிகளை மூடக் கோரி போராட்டமும் நடைபெற்றது.

  தற்போது ஓம்.எம்.ஆர். சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால், பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடி குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.டி எக்ஸ்பிரஸ் வே லிமிட்டில் கேட்டபோது, துறை ரீதியான அறிவிப்பு வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். நாவலூர் சுங்கச்சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால் அங்கு சுங்க கட்டணம் வசூல் குறித்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
  Published by:Karthick S
  First published: