• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சுங்கச்சாவடி(மாதிரிப் படம்)

சுங்கச்சாவடி(மாதிரிப் படம்)

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர்.

  • Share this:
    சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. குறிப்பாக சென்னையின் ஐ.டி ஹப்பாக மாறிய ஓ.எம்.ஆர் சாலை, 2008ஆம் ஆண்டு "IT Express way" வாக மாறியது. மத்திய கைலாஷில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி கிராமம் வரை 20.1 கிலோமீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப் பாதை அமைக்கப்பட்டது.

    மேடு, பள்ளங்கள் இன்றி பளபளக்கும் சாலை, இரவை பகலாக்கும்படியான விளக்குகள், முறையான போக்குவரத்து குறியீடுகளுடன் அமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம் அக்கறை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் சாலையில் 13 ஆண்டுகளாக கட்டண வசூல் செய்யப்பட்டு வந்தது.

    Also read: கூடுதல் கட்டணம் வசூலித்ததை அவரே ஒப்புக்கொண்ட பின்பும் தாமதம் ஏன்? எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் போஸ்டர்

    இந்த சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி கடந்தாண்டு எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தியது. மேலும், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராஜிவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்து.

    அந்த வகையில், தற்போது ஓம்.எம்.ஆர். சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால், பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அரசின் உத்தரவுபடி இன்று காலை முதல் இந்த 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: