ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்கள் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்கள் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman | திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை மியூசிக் அகாடமியில் துக்ளக் வார இதழின் 52 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிக வரி செலுத்தும் தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்தாகவே பார்க்கமுடியும். திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சுமுக உறவு இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.கடந்த 10ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நாட்டில் நடந்துள்ளது. முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இந்தியா பல மடங்கு வளர்சியடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகும் வேகமாக வளரும் நாடு இந்தியா என சர்வதேச நிதி முகமை தெரிவிக்கிறது.

தடுப்பூசி மீது அவநம்பிக்கையும், தயக்கத்தையும் ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைமை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா, அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களா என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நாட்டுக்கு எதிராக போராடும் , உடைக்கும் சக்திகளோடு காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

ALSO READ | ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு சிறுமி கொடுத்த அசத்தல் பரிசு... பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

நேரு காலத்தில் சீனா அசாம் மீது போர் தொடுத்த போது நேரு அசாம் மக்களை காக்க தவறிவிட்டார். ஒவ்வொரு  மாநிலத்திலும் தேசிய கட்சிகள் கண்டிப்பாக  தேவை. 60ஆண்டுகாலம் சோசியலிசம் என்ற பெயரில் மக்களுக்கு காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை. காங்கிரஸ் 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது மக்களின் துரதிருஷ்டவசம். நலத்திட்டங்களை சிலருக்கு கொடுத்துவிட்டு சிலருக்கு கொடுக்காமல் விடுவது திராவிட மாடல்.

மத்திய, மாநில அரசுக்கு இடையே சுமூக உறவில்லை என்றும் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று பொய் பிராசாரம் செய்கிறார்கள்.  பிப்ரவரி ,மார்ச் ஆகிய 2 மாதங்கள்  ஜி.எஸ்.டியிலிருந்து மத்திய அரசின் பங்குதொகை தமிழகத்திற்கு வழங்கவேண்டியுள்ளது விரைவில் அது வழங்கப்படும்.

ALSO READ | வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நடத்திய முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைய வேண்டும். ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்தி திணிக்கப்படவில்லை இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Nirmala Sitharaman