• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ் 18 செய்தி எதிரொலி, காலாவதியான பொருட்களை விற்றுவந்த பல்பொருள் கடைக்கு அதிகாரிகள் சீல்

நியூஸ் 18 செய்தி எதிரொலி, காலாவதியான பொருட்களை விற்றுவந்த பல்பொருள் கடைக்கு அதிகாரிகள் சீல்

காலாவதி உணவுப்பொருள்

காலாவதி உணவுப்பொருள்

காலாவதியான பொருட்களை மொத்தமாக வாங்கி குறைந்த விலையில் விரைவாக விற்றுவிடுவோம் என்றார்.

  • Share this:
நியூஸ் 18 செய்தி எதிரொலியாக சென்னை நீலாங்கரை அருகே காலாவதியான உணவுப் பொருட்களை பாதி விலைக்கு விற்ற மளிகை கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை பெசண்ட் நகர் ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்த தரணி என்ற சிறுமி, கடந்த வாரம் கடையில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி பருகிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து உயிரிழந்தார். அவரது உடலும் நீல நிறமாக மாறியது. சிறுமியின் இறப்புக்கு அவர் பருகிய குளிர்பானம் காரணமா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள எஸ்.எம்.மஹாலில் செயல்பட்டு வரும் மளிகைக் கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் குறைந்த  விலையில் விற்கபடுவதாக கிடைத்த தகவலையடுத்து நியூஸ் 18 தமிழ் குழுவினர் வாடிக்கையாளர்கள் போன்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.



மளிகைக் கடைகாரரிடம் பேசியப் போது, காலாவதியான பொருட்களை மொத்தமாக வாங்கி குறைந்த விலையில் விரைவாக விற்றுவிடுவோம் என்று தெரிவித்தார். 50 ரூபாய் விலை உடைய உணவுப் பொருட்களை வெறும் 10, 15 ரூபாய்க்கு விற்பதாக கூறி வியப்பை ஏற்படுத்திய அவர், அடுத்த வாரம் பெரிய நிறுவனம் ஒன்றின் பிஸ்கட்டுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்படவுள்ள தெரிவித்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார்.  இதில் பலவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்கள் என்பது தான் நமது அதிர்ச்சிக்கு காரணம்.

இதை செய்வாய் கிழமை மாலை படம் பிடித்து காட்டியது நியூஸ் 18, செய்தி ஒலிக்கப்பட்ட 4 மணி நேரத்திலேயே சென்னை பிரிவை சேர்ந்த உணவுத்துறை அதிகாரிகள் உடனே அக்கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். பின் அந்த கடைக்கு சீலும் வைத்தனர், அந்த கடையின் உரிமையாளரின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: