முகப்பு /செய்தி /தமிழ்நாடு / TN Assembly | திருவண்ணாமலை மக்களுக்கு குட் நியூஸ்.. 9660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

TN Assembly | திருவண்ணாமலை மக்களுக்கு குட் நியூஸ்.. 9660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

KN Neru | காவிரி நீரை அடிப்படையாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளிலும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

கேள்வி நேர்த்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அரசு முன்வருவதோடு, கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் பேசி தீர்வு காணப்படுவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read More : தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் பிள்ளைகளை சேர்க்கலாம்: இன்று முதல் சேர்க்கை ஆரம்பம்

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த 10 ஆண்டுகளில் கூட்டு குடிநீர் திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என்றும் தற்போது 490 பேரூராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரம் எங்கு இருக்கிறதோ, அங்கிருந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்திட்டத்தில் முதற்கட்டமாக 130 பேருராட்சிகளில் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருவாதவும் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

top videos

    மேலும், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு காவிரி நீரை அடிப்படையாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாவும், 9660 கோடி மதிப்பிட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீரும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    First published:

    Tags: Drinking water, KN Nerhu, Thiruvannamalai, TN Assembly, Vellore