• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வனத்துறை அனுமதி வேண்டும்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தி வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

வனத்துறை அனுமதி வேண்டும்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தி வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மெட்ரோ திட்டம்

மெட்ரோ திட்டம்

நன்மங்கலம் வனப்பகுதியில் 120 வகையான பறவைகளும், 400 வகையான தாவரங்களும் உள்ளன. உரிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் திட்டத்தை செயல்படுத்தினால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

  • Share this:
நன்மங்கலம் காப்புக்காடு வழியே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க வனத்துறை அனுமதி அவசியம் என்றும்  அதுவரை திட்டத்தை நிறுத்திவைக்க  வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2-ம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி சோழிங்கநல்லூர் சென்றாலும் இடையே உள்ள  நன்மங்கலம் காப்புக் காடு பகுதி பல்வேறு தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நன்மங்கலம் வனப்பகுதியில் 120 வகையான பறவைகளும், 400 வகையான தாவரங்களும் உள்ளன. இந்திய கழுகு ஆந்தை எனப்படும் அழிவின் விளம்பில் உள்ள பறவை இனம், சென்னை மாநகரில் இப்பகுதியில் மட்டுமே வாழ்கிறது.இப்பகுதியில் உரிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் திட்டத்தை செயல்படுத்தினால், இப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 78% கூடுதல் மழை!


மேலும்  நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது, நன்மங்கலம் காப்புக்காடு வழியாக மெட்ரோ ரயில் தடம் அமைக்க, வனநிலத்தை எடுப்பது குறித்து  வனத்துறை பதில் அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே அனுமதி கோரி மெட்ரோ நிர்வாகம் வனத்துறையிடம் நகல்களை அனுப்பி இருந்தது. ஆனால் அதில் போதிய விளக்கங்கள் இல்லை என்ற காரணத்தால் நேற்று   மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வனத்துறை மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநிலத்தவர்களிடம் கட்டணம் வசூல்: அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்!


அதில், மெட்ரோ நிர்வாகம் 320 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்ட நன்மங்கலம் வன பகுதியில்  1.5 எக்டர் அளவு நிலம் மட்டுமே தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதிலும் இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றோ வனத்துறையில் மேலும் சில தகவல்கள் தர வேண்டும் எனவும் கூறி  தற்போது வரை மெட்ரோ ரயில் இரண்டாவது வழி தடத்திற்கான அனுமதி வனத்துறை வழங்கவில்லை.

இதையும் படிங்க: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தன்னம்பிக்கையுடன் தேநீர் கடை தொடங்கிய திருநங்கைகள்!


எனவே வனத்துறை  அனுமதி பெற்ற பிறகே மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தை தொடங்க வேண்டும் அதுவரை நிறுத்திவைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: