சென்னை, ஐசிஎஃப் பகுதியில் இருந்து கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதிக்கு இருப்புப்பாதை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, வில்லிவாக்கம் இருப்புப்பாதை வாயில் வி6 காவல் நிலையம் அருகில் உள்ள ஜி.கே.எம் காலனி மற்றும் ஒளவை நகர் பகுதிகளில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை தமிழக அரசு இடித்துள்ளது. இதையடு அந்த பகுதியை சீமான் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மேம்பாலப் பணிகளுக்காக 11 மீட்டர் இடங்களை எடுத்துக்கொள்வதாக மக்களிடம் கூறிவிட்டு, கூடுதலாக இடங்களை அரசு கையாகப்படுத்தி அங்கிருந்த வீடுகளைத் திடீரென்று இடித்ததுதான் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். அவர்களுக்கு உரிய புதிய வீடுகளைக் கொடுத்துப் பாதுகாப்பாக மக்களை வெளியேற வைத்துவிட்டு அதன்பிறகு இடித்திருக்கலாம். வளர்ச்சி என்ற பெயரில் பாலங்களைக் கொண்டுவந்தாலும் மக்களுக்கு ஏற்படும் இழப்பினை சரிசெய்த பிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு.
எங்கள் மக்கள் உடைமைகளை எங்குக் கொண்டு வைப்பது என்று தெரியாமல் கண்ணீரோடு வீதியில் நிற்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. மாற்று இடம் தரவில்லை என்றால் மக்கள் எங்குப் போவார்கள்? என்னதான் செய்வார்கள்? நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்று பேசுவதே தவறு. நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் வரை அரசு என்ன செய்து கொண்டிருந்து? வீட்டுமனை பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்துமே அரசு கொடுத்துள்ளது, வரியும் வாங்கியுள்ளது.
Also Read : நகைக் கடன் தள்ளுபடி.. பொங்கலுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்
அப்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிக்கப்பட்ட இடமென்று? இரு திராவிடக் கட்சிகளும் மாறிமாறி ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் அனுமதித்துத்தானே அந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளன. எனவே மக்களைப் பழி சொல்வது பயனில்லை. அரசு தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் விட்டுவிட்டு ஐம்பது, அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இன்றைய மதிப்பிற்குரிய இழப்பீடும் தராமல், திடீரென்று உடைமைகளை வீதியில் எறிந்துவிட்டு வீடுகளை இடித்ததுதான் ஏற்க முடியவில்லை.
Also Read : மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்
முதல்வர் தொகுதியிலேயே இப்படி நடக்கிறது என்பதனை அடக்குமுறைகளை மீறி ஊடகங்கள்தான் இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமும், உரிய இழப்பீடும் வழங்க தமிழநாடு அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Naam Tamilar katchi, Seeman