Home /News /tamil-nadu /

ஆண் பிள்ளைகளை கண்டித்து வளருங்கள்.. நள்ளிரவு சம்பவத்தால் தேசிய மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா வேதனை

ஆண் பிள்ளைகளை கண்டித்து வளருங்கள்.. நள்ளிரவு சம்பவத்தால் தேசிய மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா வேதனை

நிவேதா

நிவேதா

Chennai : சென்னையில் பின்தொடர்ந்து ஆபாசமாக நடந்து கொண்டு செல்போன் பறிக்க முயன்றதாக மர்ம நபர் மீதுதேசிய மோட்டார் சைக்கிள் வீராங்கனை சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் நிவேதா(25) பி.டெக் படித்து முடித்துவிட்டு பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பின் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

    இந்நிலையில்,  இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறை டுவிட்டர் பக்கத்தை இணைத்து புகார் ஒன்றை அளித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் உள்ள மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் போது, கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பின் தொடர்ந்ததாக  தெரிவித்துள்ளார்.

    ஒல்லியான உருவம் கொண்ட அந்த மர்மநபர் ஆலந்தூர் வரை பின்தொடர்ந்து வந்ததாகவும், அதன்பின் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடும்பதாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Also Read: ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு! சென்னையில் சோகம்!!

    அந்த மர்ம நபர் சென்று விட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது , மீண்டும் அந்த மர்ம நபர் பின் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். சரியாக ஒரு மணி அளவில் கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும்போது அந்த மர்ம நபர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் செல்போனை பறிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதனால், தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பசு ஒன்றின் மீது மோதி செல்போனை கீழே தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த வாலிபர் தைரியமாக, தான் ‘இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என மிரட்டி சென்றதாக தெரிவித்துள்ளார்.

     



    மேலும், அவ்வாறு நடந்து கொண்ட அந்த மர்ம நபரை தன் இரு சக்கர வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்றதாகவும் ஆனால் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாகவும் நிவேதா தெரிவித்துள்ளார்.
    இதையடுத்து தனது செல்போனை தேடி எடுத்த பின் காவல்துறை வழங்கிய எஸ்.ஓ.எஸ். செயலியை பயன்படுத்தியதாகவும் ஆனால் எந்தவித பதிலும் காவல் துறையிலிருந்து கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பயன்படாத இந்த செயலி எதற்காக கொண்டு வந்தார்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதன்பின் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் தவறாக நடந்து கொண்ட அந்த மர்ம நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் ஜெஸ்ஸிகா பதிவிட்டுள்ளார். மேலும் இது போன்ற எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாது எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    Must Read : வடமாநில இளைஞரை கொன்று புதிதாக கட்டப்படும் வீட்டில் புதைப்பு - உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

    இந்தப் பக்கத்தில் இந்த பதிவை பதிவிட்டு தமிழக டிஜிபி, தமிழக காவல்துறை போன்ற பக்கங்களை இணைத்து வெளியிட்டுள்ளார். இந்தப் புகாரை சம்பவம் நடந்து காவல்துறையிடம் புகார் அளித்த உடனேயே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், மறுநாள் காலை 7 மணி அளவில் மாநில கட்டுப்பாட்டு அறையின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து, எஸ்ஓஎஸ் செயலி செயல்பாடு குறித்து நிவேதாவிடம் கேட்டுள்ளனர்.
    மேலும் சென்னை காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து விட்டதாகவும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பேட்டி அளித்த நிவேதா கூறுகையில், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனடியாக அந்த சமூக விரோதி கைது செய்து, எதற்காக அப்படி நடந்துகொண்டார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பெண்களை கண்டித்து வளர்ப்பதை விட்டுவிட்டு ஆண்களை கண்டித்து வளர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    செய்தியாளர் - சுரேஷ்
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Sexual harassment, Woman

    அடுத்த செய்தி