Home /News /tamil-nadu /

10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை - அம்பத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்

10 வயது மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை - அம்பத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்

மகனுக்கு விஷம் கொடுத்த தாய், தானும் குடித்து தற்கொலை

மகனுக்கு விஷம் கொடுத்த தாய், தானும் குடித்து தற்கொலை

Ambattur : சென்னை அம்பத்தூரில் தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது, அக்கம் பக்கத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் வசித்து வருபவர்  லதா வயது 37. இவர் தன் கணவனை பிரிந்து 2 வருடங்களுக்கு முன் விவாகரத்தாகி தனிமையில் வாழ்ந்து வந்தார். அவருடன் 10 வயது மகன் தவஞ்ச் குமார் இருவரும் வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று காலை 6:30 மணியளவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    முன்னதாக, ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த லதாவின் மகன் தவஞ்ச் குமார் உடனடியாக உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். மேலும், அக்கம் பக்கத்தினர் அழைத்து உதவியும் கேட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அங்கே, லதா வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.  உடனடியாக தவஞ்ச் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தவஞ்ச் குமாரும் உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் லதாவின் செல்போனில் நேற்று இரவு முதல் பதிவாகியிருந்த தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். என்ன பிரச்சினை இருந்து வந்தது இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் - கன்னியப்பன். 




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Commit suicide, Poison

    அடுத்த செய்தி