• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகளிடம் அத்துமீறிய கள்ளக்காதலன்.. உடந்தையாக இருந்த தாய் - சென்னையில் நடந்த கொடூரம்

மகளிடம் அத்துமீறிய கள்ளக்காதலன்.. உடந்தையாக இருந்த தாய் - சென்னையில் நடந்த கொடூரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் 15 வயது சிறுமிக்கு தாயின் கள்ளக்காதலன் சந்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதற்கு தாய் உறுதுணையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  • Share this:
    கொரட்டூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை, கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் பிரியங்கா ( வயது37). நரேஷ் குமார் என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் -மனைவி இருவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார். சிறுமி தனது தாயுடன் உள்ளார். பிரியங்கா தனது மகளுடன் கொரட்டூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அம்பத்தூர் திருவெங்கட நகரைச் சேர்ந்த சந்தீப் (வயது 37) என்ற நபருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதன் பிறகு, இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சந்தீப், பிரியங்கா அவரது மகள் 15 வயது சிறுமி மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சந்தீப், பிரியங்காவின் 15வயது மகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுதெரிந்தும் பிரியங்கா தனது காதலனை தட்டிக்கேட்காமல் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர், அவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை சந்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததும், மேலும், தாய் பிரியங்காவும் உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாய் பிரியங்கா மற்றும் கள்ளகாதலன் சந்தீப் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: