இருதய நோயால் மருத்துவமனையில்  தாய்  கவலைக்கிடம்; அதிர்ச்சியில்  மகன்  தூக்கிட்டு தற்கொலை!

ஸ்டான்லி மருத்துவமனை

கடந்த 5 நாட்களுக்கு முன்பு, இதய நோய் காரணமாக , ஜெயந்தி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,

 • Share this:
  சென்னை, புது வண்ணாரப்பேட்டை,  ஜீவா நகர், பகுதியை  சேர்ந்தவர்   லாரன்ஸ்(28), இவர், தனியார்   நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் . இவரின் மனைவி புனிதா, திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் .லாரன்ஸ்,  மனைவி மற்றும் அம்மா  ஜெயந்தி, தாத்தா சின்னப்பன் ஆகியோருடன், கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

  இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு, இதய நோய் காரணமாக , ஜெயந்தி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவர், உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வரும் நிலையில்  உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து லாரன்ஸ்க்கு , தகவல் கிடைத்தது.

  Read More:   ஆந்திராவுக்கு எல்லைதாண்டி படையெடுக்கும் தமிழக மதுபிரியர்கள்!

  இதனால் , விரக்தியில் இருந்த லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  உடனடியாக அக்கம்பக்கத்தினர்  புது வண்ணாரப்பேட்டை  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்  உடலை கைப்பற்றி  பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர் அசோக்குமார், சென்னை
  Published by:Arun
  First published: