Home /News /tamil-nadu /

தங்களது பதவியை காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விட்டனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தங்களது பதவியை காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விட்டனர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin : ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள், தங்களது பதவியை காப்பாற்றுவதற்காக நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    சென்னையில் தனது கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, திரு.வி.க., நகர் மண்டலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து பல்லவன் சாலையில் புதியதாக கட்டப்பட்ட பகுப்பாய்வு மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டடத்தை திறந்துவைத்தார். எஸ்.ஆர்.பி.கோவில் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

     



    அதன்பின்னர் பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனையில் 75 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு மையத்தை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, லூர்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள அனிதா அகாடமியில் பயிற்சி பெற்ற 223 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.

    Must Read : அரிசி, கோதுமை போன்று கேழ்வரகு கூட இனி ரேஷன் கடையிலேயே வாங்கலாம்.. அரசு சூப்பர் அறிவிப்பு

    அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்குள் நீட் தேர்வை அனுமதித்ததாக விமர்சித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kolathur Constituency, MK Stalin, Neet Exam, OPS - EPS

    அடுத்த செய்தி