Home /News /tamil-nadu /

கணவருடன் சண்டை... ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை!

கணவருடன் சண்டை... ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் திருமணமான ஒரே வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னையில் 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே வருடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையை அடுத்த திருவேற்காடு, கனக துர்கா நகரை சேர்ந்தவர் ஹரிபாபு (24), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி (20), என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று ஜெயந்தி தனது அறைக்குள் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து பார்த்தபோது, அவர் மின்விசிறியில் கயிற்றில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை.. பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்யராஜ் பேச்சு

    விசாரணையில் சமீப காலமாக கணவருடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை எழுந்துவந்துள்ளது. அதனால் சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயந்தி இன்று கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - சோமசுந்தரம்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Crime News, Suicide

    அடுத்த செய்தி