தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்று தீபாவளி சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பெரும் பழுது உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால், தீபாவளி பண்டிகைய முன்னிட்டு 20,334 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது என கூறினார். நேற்றைய தினம் சென்னையில் இருந்து 2,100 வழக்கமான பேருந்துகளுடன் 338 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 89,932 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். இன்றைய தினம் 7மணி நிலவரப்படி சென்னையிலிருந்து இயக்கப்படும் 2,100 தினசரி பேருந்துகளில் 1,796 பேருந்துகளும், 1,575 சிறப்பு பேருந்துகளில் 501 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, 4,785 பேருந்துகளில், 1,88,107 பயணிகள் பயணம் செய்துள்ளதாக கூறினார்.
நாளைய தினம் சென்னையிலிருந்து 2,100 தினசரி பேருந்துகளும் 1,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கூறினார். இச்சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்திட 1,05,051 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், முன்பதிவு வாயிலாக 5 கோடியே 46 இலட்சம் வருவாய் ஈட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 04424749002, 18004256151 கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.
மேலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுவரை 5 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும் ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணம் என கூறி கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரப்பூர்வமாக வழங்கினால் எந்தெந்த பேருந்துகள் முறைகேட்டில் ஈடுபடுகின்றதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போக்குவரத்து பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர்க்காக தண்ணீர் எடுக்கப்படும் இடத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.