Home /News /tamil-nadu /

நள்ளிரவில் ஆவின் வேனை நிறுத்தி அமைச்சர் நாசர் ஆய்வு: பால் களவுபோனது கண்டுபிடிப்பு

நள்ளிரவில் ஆவின் வேனை நிறுத்தி அமைச்சர் நாசர் ஆய்வு: பால் களவுபோனது கண்டுபிடிப்பு

அமைச்சர் நாசர் ஆய்வு

அமைச்சர் நாசர் ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    கொரட்டூரில் ஆவின் பால் வண்டியை வழிமறித்து அமைச்சர் சாமு.நாசர் நள்ளிரவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், ரூபாய் 2484  மதிப்புள்ள 107 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, கிருஷ்ணாகிரி, சேலம், வேலூர், தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செஞ்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் வாடகை வாகனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர் ஆவின் ஆலைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர்  பால் மொத்தமாக பதப்படுத்தப்பட்டு  நிலைப்படுத்தபடுகிறது. இவ்வாறு பேக்கிங் செய்யப்படும் பால் பாக்கெட்டுகள்  சுமார் 85 வாகனங்களில் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, முகப்பேர், பாடி, கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

    இதையும் படிக்க: கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜா விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி


    அவ்வாறு பாலை ஏற்றி சென்ற வேனை நேற்று நள்ளிரவு கொரட்டூர் அருகே பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது,  ஒரு வாகனத்தில், 106 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2,484 ஆகும் .

    அமைச்சர் நாசர் ஆய்வு


    இது தொடர்பாக  அமைச்சர் நாசர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,  அம்பத்தூர் பண்ணையில் இருந்து சுமார் 85 லோடு வாகனங்கள் மூலம் பால் வினியோகம் செய்யப்படுகிறது.  இதேபோல் எந்த வாகனத்தில் கூடுதலாக பால் பாக்கெட் எடுத்து செல்லப்பட்டது என கண்டறியப்படும் என தெரிவித்தார். மேலும், இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் நாசர் கூறினார்.

    மேலும் படிக்க: இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


    அம்பத்தூர் ஆவின் பண்ணையில் கடந்த 6 நாட்களாக ஓப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாட்கள் வேலைக்கு வராததால் பால் உற்பத்தி செய்து வினியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்தது நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இந்த பிரச்சனை இருந்ததாகவும் விரைவில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  நாசர் கூறினார்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Aavin, Milk

    அடுத்த செய்தி