சென்னையின் முக்கிய நகர்பகுதிகளில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையை தினமும் பல்லாயிர கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை இதுவரை 5.30 மணி முதலே இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு தற்போது பழைய நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ இரயில் சேவையானது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும்.
மக்கள் நெரிசல்மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
Also Read : சென்னையின் பிரதான பகுதிகளில் இன்று (17-03-2022) மின் தடை அறிவிப்பு
மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ இரயில் சேவையானது காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.