Home /News /tamil-nadu /

சென்னையில் பெய்த பேய் மழைக்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

சென்னையில் பெய்த பேய் மழைக்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

File image

File image

Chennai Rains | சென்னையில் நேற்று அதீதீவிர கனமழை பெய்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் லெள்ளமாக சூழ்ந்து போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னையில் நேற்று திடீரென தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் மழை நீரில் மூழ்கின. தொடர் கனமழையின் காரணமாகப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனால் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்குள்ளாகினர். மேலும் பேருந்துகள் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டால், பொதுமக்கள் பலர் நீண்ட தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர்.

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை



    இப்படி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சட்டென முடக்கும் அளவுக்கு, யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது ஏன் என்பதே பலருடைய கேள்வியாக இருந்துவந்தது. இந்தநிலையில், நேற்று பெய்த எதிர்பாராத கனமழை குறித்து தமிழ்நாடு வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், ‘தரவுகளின் அடிப்படையில் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுகிறோம். சென்னையில் நேற்று(டிச.,30) 10 கி.மீ., உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என எதிர்பார்த்தோம். மேக வெடிப்பு காரணமல்ல. கடலில் இருக்கும் என்று கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்குசுழற்சி நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே சென்னையில் இந்த அளவிற்கு திடீர் கனமழைக்கு காரணம். கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் நேற்றே கனமழை பெய்தது. கடலில் இருக்கும் கணிக்கப்பட்ட வளிமண்டல சுழற்சி திடீரென நிலப்பகுதிக்கு நகர்ந்தது. அதிகனமழை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

    நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சியை கடலில் இருப்பதாக கணித்துவிட்டோம். நிலப்பகுதியில் இருந்ததை கணிக்க தவறிவிட்டோம். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்தளவு தான் கணிக்க முடிகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும். ஆனால் சென்னையில் நேற்று பெய்த திடீரென கனமழை போல் அதிக கனமழை இருக்காது. மிதமான மழைபெய்யக் கூடும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai rains, Meteorological Center

    அடுத்த செய்தி