தாம்பரத்தில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் சென்னை கிறித்தவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் பிஎச்.டி. படித்து வரும் மாணவி ஒருவரிடம் பேராசிரியர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததாக, அந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவிகளின் ஆடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனை கண்டித்து கல்லூரி வளாகத்திலேயே 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மாணவர்கள் தங்களின் பிரச்சினைகளையும், புகார்களையும் தெரிவிக்க கல்லூரியில் மாணவர்களுக்கான தேர்தல் நடத்தி தனியாக கமிட்டி உருவாக்க வேண்டும் என்று கூறினர்.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நிர்வாகத்தில் நேரடியாக தெரிவிக்க முடியும் என்றும்,
மேலும் கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாலின விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடி தீர்வு காணவேண்டும். மாணவர்களின் ஆடை குறித்து குறை கூறுவதை கல்லூரி நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Must Read : பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்
இது குறித்து மாணவர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர், மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.
செய்தியாளர் - சுரேஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College girl, College student, Protest, Sexual harassment