முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை

பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் என மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி, பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  மாணவியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் அறையில் மூன்று கடிதங்கள் சிக்கின.

அதில் ஒரு கடிதத்தை எழுதி கிழித்த நிலையில் போலீசார் கண்டெடுத்தனர். அதில் பெண்களுக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், பாதுகாப்பானது தாயின் கருவறையும், கல்லறையும் தான் என்றும் உருக்கமாக எழுதி வைத்திருந்தார்.

Also Read: வாட்ஸ் ஆப் குரூப்பில் செக்ஸ் வீடியோ.. கணக்கு வாத்தியாரின் சேட்டை - மாணவர்கள் ஷாக்

இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து பெண்ணின் செல்போனை கைப்பற்றி கடைசியாக அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்று ஆய்வு செய்தனர்.

அதில் முன்னாள் ஆசிரியர் மகன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்து, அந்த மாணவன் யார் என்பதும், அவர் படிக்கும் தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் 17 வயது மற்றும் 20 வயது என மூன்று இளைஞர்களிடமும் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்களா அல்லது காதல் தொல்லை கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரித்தனர். இதனிடையே உடற்கூறு ஆய்வு முடிந்து மாணவி உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மாணவியின் உறவினர்கள் கதறி அழுதனர். அக்கம், பக்கத்தினர் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Also Read: ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் கைது

இச்சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தேவைப்படுவதாக கூறினார். இந்தநிலையில் பாலியல் புகார்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் 1098 எண்ணை தொடர்பு கொண்டு, மாணவர்கள் ஆலோசனை பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மாணவ- மாணவிகள் இந்த எண்ணுக்கு தகவல் கொடுக்கும் போது அவர்களது ரகசியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Commit suicide, Crime News, Girl students, Police, School students suicide