• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா ஊசி போட வந்திருக்கேன் ஆதார் கார்டு எடுங்க - சிறுவர்களை ஏமாற்றி பீரோவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்

கொரோனா ஊசி போட வந்திருக்கேன் ஆதார் கார்டு எடுங்க - சிறுவர்களை ஏமாற்றி பீரோவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்

சென்னையில் நடந்த கொள்ளை

சென்னையில் நடந்த கொள்ளை

பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மர்ம நபர், இரு சிறுவர்களையும் வீட்டிற்குள் வைத்து வெளியே தாழ்பாள் போட்டு உள்ளார்.

  • Share this:
    வீட்டில் தனிமையில் இருந்த 2 சிறுவர்களை ஏமாற்றி கொரோனா ஊசிபோட வந்துள்ளதாக கூறி ஆதார் விவரம் கேட்டு வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 4 சவரன் நகை கொள்ளையடித்துள்ள சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், கணபதி நகர்,பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (33). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (27). இவர் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

    இவர்களுக்கு மணிகண்டன் (11), மோனிஷ் (9) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,நேற்று காலை லோகநாதன், புஷ்பலதா ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர், வீட்டில் மணிகண்டன், மோனிஷ் ஆகியோர் ஆன்லைன் வகுப்பு என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். பிறகு காலை 10.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் பைக்கில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    பின்னர், அவர் சிறுவர்களிடம், உங்களது பெற்றோர் தடுப்பூசி போட்டு விட்டார்களா?, உங்களது ஆதார் கார்டுகளை எடுங்கள் என கேட்டுள்ளார். இதனையடுத்து, இரு சிறுவர்களும் வீட்டுக்குள் அவரை வரவழைத்து பீரோவில் இருந்த ஆதார் கார்டை எடுத்து காண்பித்துள்ளனர். பின்னர், பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு மர்ம நபர், இரு சிறுவர்களையும் வீட்டிற்குள் வைத்து வெளியே தாழ்பாள் போட்டு உள்ளார்.

    பின்னர், அவர் அங்கிருந்து பைக்கில் தப்பிசென்றார். இதன் பிறகு, இரு சிறுவர்களும் சப்தம் போட்டு அலறி உள்ளனர். அவர்களது சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், கதவை திறந்து அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து, பொதுமக்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்து  வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது, பெற்றோரிடம் நடந்தவற்றை இரு சிறுவர்களும் கூறி அழுது உள்ளனர். இதனை அடுத்து, லோகநாதன், புஷ்பலதா ஆகியோர் வீட்டு பீரோவை சோதனை செய்த போது அங்கு இருந்த 4சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. மேலும், வீட்டுக்கு வந்த மர்ம நபர் இரு குழந்தைகளையும் நூதன முறையில் ஏமாற்றி வீட்டுக்குள் வந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து லோகநாதன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர்  கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா மூலமாக கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
    வீட்டிற்குள் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 4 சவரன் நகை கொள்ளையடித்துள்ள சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கன்னியப்பன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: