Home /News /tamil-nadu /

அம்மா செண்டிமெண்ட்.. உதவித்தொகை டிராமா - மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளை சுருட்டிய பலே கொள்ளையன்

அம்மா செண்டிமெண்ட்.. உதவித்தொகை டிராமா - மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளை சுருட்டிய பலே கொள்ளையன்

கொள்ளையன் சித்ரவேல்

கொள்ளையன் சித்ரவேல்

தாம்பரம் பகுதியில் நூதன முறையில் மூதாட்டிகளை குறி வைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சித்ரவேல் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    பெண்களுடன் உல்லாசமாக இருக்க 400க்கும் மேற்பட்ட மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பலே கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை தாம்பரம் அடுத்த பழைய பல்லாவரம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (வயது71). இவர் பல்லாவரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக மதியம் சுமார் 12 மணி அளவில்  வந்துள்ளார்,அப்போது ஒரு மர்ம நபர் சரோஜாவை பார்த்து எனது தாய் போல இருப்பதாக கூறி பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த  நபர் சமூக சேவைகள் செய்து வருவதாகும் அதிலும் குறிப்பாக முதியோர் உதவித்தொகை பலருக்கு வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார். உங்களுக்கும்  முதியோர் உதவித்தொகை வேண்டுமா என கேட்டதும் அந்த மூதாட்டி வாங்கி தாருங்கள் என்று கூறியதும், தாம்பரம் தபால் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

    தபால் நிலையத்திற்கு வந்த சரோஜாவிடம் நீங்கள் கழுத்தில் நகைகளை அணிந்திருந்தால் முதியோர் உதவி தொகை தர மாட்டார்கள் என்று கூறி நகைகளை கழற்றி என்னிடம் கொடுங்கள் நான் பிறகு தருகிறேன் என்று கூறியதும் உடனே மூதாட்டி நகைகளை கழட்டி கொடுத்துள்ளார்.  அதன்பிறகு தபால் நிலையத்துக்கு உள்ளே மூதாட்டியை அழைத்துச் சென்று நிற்க வைத்து விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் 4 சவரன் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
    வெகு நேரம் ஆகியும் அந்த நபர் வராததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    Also Read:  காதலித்த பெண்ணை திருமணம் செய்தவரின் தலைவெட்டிக் கொன்ற இளைஞர் - கோவில்பட்டியில் ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
    கடந்த 8ம் தேதி பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு மர்ம நபர் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி தாம்பரம் தபால் நிலையத்தில் வைத்து 2 சவரன் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றதாக மீண்டும் தாம்பரம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

    தாம்பரம் பகுதியில் நூதன முறையில் மூதாட்டிகளை குறி வைத்து தொடர் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வந்ததால் இந்த சம்பவங்கள் குறித்து தாம்பரம் காவல் நிலைய  குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெய்சங்கர், துணை ஆய்வாளர் கஜபதி உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு 40 மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மதுரை மாவட்டம், எல்லீஸ் நகரைச் சேர்ந்த சித்திரவேல் (வயது39) என்பவர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    Also Read: திருமணமான மறுநாளே நகை பணத்துடன் மனைவி ஓட்டம் - புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

    சித்திரவேலை பிடிக்க மதுரைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர் ஆனால் அவர் அங்கு இல்லாததால் அங்கு இருப்பவர்களிடம் சித்திரவேலின் தொலைபேசி எண்ணை வாங்கி தொலைபேசி எண்ணின் சிக்னலை டிரேஸ் செய்தபோது அவர் தாம்பரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.உடனே தனிப்படை போலீசார் தாம்பரம் போலீசாரை தொடர்பு கொண்டு குற்றவாளி தாம்பரம் பகுதியில் இருப்பதாக கூறியுள்ளனர். உடனடியாக தாம்பரம் போலீசார் குற்றவாளியை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் அவரைக் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை செய்தபோது தாம்பரத்தில் மூதாட்டியிடம் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற வந்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தனர்.

    மேலும் விசாரணையில் சித்திரவேல் 14 வயதில் இருந்தே கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்ற தொடங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் மீது வள்ளியூர், நாங்குநேரி, கோவில்பட்டி, ராஜபாளையம், உசிலம்பட்டி,மதுரை, பழனி, பரமக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம், திண்டிவனம், கோயமுத்தூர், கள்ளகுறிச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, பூந்தமல்லி, பூக்கடை, தாம்பரம் உட்பட 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதுவரை 400க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் நூதன முறையில் நகைகளைத் திருடி அவற்றை விற்று வந்த பணத்தில் பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததாக போலீசாரிம் கூறினர்.பின்னர் அவரிடம் இருந்து 6,சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: சுரேஷ்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV Footage, Crime | குற்றச் செய்திகள், Gold Robbery, Gold Theft, Robbery

    அடுத்த செய்தி