வங்கி பெண் மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை.. கணவர் வெறிச்செயல்..!

மனைவியை கொலை செய்து கைதான கணவர்

கணவர் அச்சுதானந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

  • Share this:
    காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை, கணவர் சுத்தியலால் அடித்து கொலை செய்தது சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண் கிண்டியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த கணவனை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் மனோபாரதி (வயது 37) இவர் கிண்டி பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் அச்சுதானந்தன் என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவர் அச்சுதானந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

    நேற்று மாலை 4 மணிளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டதன் காரணமாக அச்சுதானந்தன் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் பலமாக  தாக்கியுள்ளார்.

    Also Read:   வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் குடும்பத்தினர் சிக்கியது எப்படி? 

    இதில் படுகாயமடைந்த மனோ பாரதியை ஆம்புலன்ஸ் மூலம்  ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் கிடைத்த ஜெ.ஜெ.நகர் போலீசார் போலீசார் அச்சுதானந்தனை கைது செய்து எதற்காக பிரச்சினை ஏற்பட்டது எந்த நோக்கத்துக்காக கொலை செய்தார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also Read:    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத விலை 4 மடங்கு அதிகரிப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல, தேனியில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அவரை கொலை செய்த குடும்பத்தினர், அந்த கொலையை மறைத்துவிட்டு ஒரு வருடமாக நாடகமாடி வந்த நிலையில், தனது மகளின் கணவருடைய தந்தை மூலமாக பெண்ணின் தந்தைக்குக்கு கிடைத்த தகவல் மூலம் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராணுவ வீரரான பெண்ணின் கணவர், போலீஸ்காரரான கணவரின் சகோதரர், தாய் உள்பட மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன், அம்பத்தூர்
    Published by:Arun
    First published: