Home /News /tamil-nadu /

புதிய வகை கொரோனா குறித்த அச்சம் வேண்டாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா குறித்த அச்சம் வேண்டாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

Ma Subramanian : இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவ கட்டமைப்பு தமிழகத்தில் இருப்பதால், உருமாறிய புதிய வகை கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
சென்னை மாநகராட்சியின் 136வது வட்ட மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜ் அலுவலகத்தை கே.கே.நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
கொரோனாவை விட பத்து மடங்கு வீரியத்துடன் வேகத்துடனும் பரவக் கூடியதாக இந்த உருமாறிய எக்ஸ் இ (XE) தொற்று இருப்பதாக சொல்வதாக கூறினார்.

இந்தத் தொற்று மும்பை மற்றும் குஜராத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அதை அம்மாநிலங்கள் மறுத்திருந்தாலும் அது குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தற்காப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்திய மருத்துவ கட்டமைப்பால் இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட மூன்றாம் அலையில் குறைவான பாதிப்பே ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே மிக சிறந்த மருத்துவ கட்டமைப்பு  தமிழகத்தில் இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

Must Read : தடையின்றி சீரான மின்சாரம் வழங்க ஏற்பாடு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

மேலும், சுயமரியாதை, மொழி , இன விவகாரங்களில் சிக்கல் வரும் போது தமிழகம் தனித்துவமான மாநிலமாக உள்ளதாக கூறிய அமைச்சர், திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வரும் எந்த வித பாதிப்பிலிருந்து  தமிழகத்தை மீட்டெடுத்து  தமிழகத்தை மிக சிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: Corona, Covid-19, Ma subramanian

அடுத்த செய்தி