Home /News /tamil-nadu /

காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இளைஞர் தற்கொலை

இளைஞர் தற்கொலை

காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் காதலி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் காதலனும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்த எழில் (வயது 26) என்பவர் தனது உறவுக்கார பெண்ணான மேனகா என்பவரை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்ததார். இந்நிலையில் காதலி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மாதம் காதலி மேனகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலன் எழில் உணவகம் நடத்தி வந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகவும் இந்த மாதம் ஏற்பட்ட ஊரடங்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் உணவகத்தில் போதிய வருமானம் இல்லாததால் உணவகத்தை மூடிவிட்டார்.

    Also Read: இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - புதுக்கோட்டையில் பரபரப்பு

    கடந்த ஒரு மாத காலமாகவே காதலி தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காதலன் எழில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரூமினுள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது தந்தை முருகன உடனடியாக உறவினர்களோடு அவரை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

    Also Read: சென்னையில் சிறுமிகளை அடித்து துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திரிபுரா தம்பதி கைது

    அங்கு  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் புதுவண்ணாரப்பேட்டை காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    காதலியை இழந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அசோக் குமார்




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Love failure, Love issue, Youth dead

    அடுத்த செய்தி