Home /News /tamil-nadu /

குழந்தை எனக்கு பிறக்கவில்லை.. கைவிரித்த காதலனால் பெண் தற்கொலை - செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்

குழந்தை எனக்கு பிறக்கவில்லை.. கைவிரித்த காதலனால் பெண் தற்கொலை - செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்

சென்னை தற்கொலை விவகாரம்

சென்னை தற்கொலை விவகாரம்

குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று கூறி காதலன் துன்புறுத்தியால் பெண் தற்கொலை.

    பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த சில தினங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக காதலன் மீது பெற்றோர் புகார். பூந்தமல்லியை சேர்ந்தவர் கோபிநாத்(  வயது 55), இவரது மகள் கற்பகம்(வயது 27), இவருக்கு திருமணமாகி  9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து மகளுடன் பெற்றோருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆகாஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தற்போது குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கற்பகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பூந்தமல்லி போலீசார் இறந்து போன கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கற்பகத்தின் செல்போனில் சில தகவல்கள் அவரது தந்தைக்கு தெரியவந்ததையடுத்து கற்பகத்தின்  தற்கொலைக்கு காரணம் அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஆகாஷ் தான் எனக் கூறி அவரது தந்தை பூந்தமல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    Also Read: கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலை

    அந்த புகாரில் தனது மகள் கற்பகம் திருமணமாகி 9 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் கணவரை பிரிந்து தன்னுடைய வீட்டில் வசித்து வந்ததார். பூந்தமல்லியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் அங்கு பணிபுரிந்த அவரது தோழிகளின் சகோதரனான ஆகாஷ்(என்ற) கவுதமை காதலித்து வந்ததாகவும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கற்பகம் குழந்தை பெற்றெடுத்தார்.

    இந்நிலையில் அந்த குழந்தை தனக்கு பிறந்ததில்லை என்று கூறி ஆகாஷ் துன்புறுத்தி வந்ததார். இந்த நிலையில் தனது மகளின் மீது சந்தேகம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிய நிலையில், மகள் தற்கொலை செய்து கொண்டார். தனது மகளின் தற்கொலைக்கு காரணமான ஆகாசை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார். மேலும் ஆகாஷ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் ஆயுதங்களை கையில் வைத்து கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு இருப்பதும் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ மற்றும் அதுகுறித்த ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.

    Also Read: மாடுபிடி வீரருக்கு கார் பரிசா? தங்கர்பச்சான்சொல்லும் மாற்று யோசனை

    தனது மகள் கடைசியாக அவனது அண்ணனிடம் செல்போனில் பேசிய உரையாடல்களையும் போலீசாரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது இது சம்பந்தமான புகைப்படம் மற்றும் வீடியோ, குற்றப்பத்திரிகை நகல் அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி தனது மகளின் செல்போனை கேட்டு ரவுடிகள் சிலருடன் வீட்டிற்கு வந்து தன்னையும் பேத்தியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சோமசுந்தரம் 

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Death, Illegal affair, Illegal relationship, Love life

    அடுத்த செய்தி