Home /News /tamil-nadu /

சென்னையில் மிகவும் குறைந்த வாக்குப் பதிவு: காரணம் என்ன?

சென்னையில் மிகவும் குறைந்த வாக்குப் பதிவு: காரணம் என்ன?

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

சென்னையில் ஒட்டுமொத்தமாக உள்ள 61,73,112 வாக்காளர்களில் வெறும் 26,94,785 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்தில் சென்னையில்தான் குறைந்த அளவில் வாக்குப்பதிவாகியுள்ளது 43.59% மட்டுமே வாக்குப்பதிவாகியுள்ளது. மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்வோம்.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 82.13 சதவீதமும் குறைந்தபட்ஷமாக நீலகிரி மாவட்டத்தில் 66.29 சதவீதமும் வாக்குப்பதிவானது.

    நகராட்சிகளில் அதிகபட்ஷமாக தர்மபுரி மாவட்டத்தில் 81.37 சதவீதமும் குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 59.98 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.

    மாநகராட்சிகளில் அதிகபட்ஷமாக கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீதமும் குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 43.59 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளன. தமிழகத்திலேயே சென்னையில்தான் வாக்குப்பதிவு மிகக்குறைவு. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2,670 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5,794 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சென்னையில் ஒட்டுமொத்தமாக உள்ள 61,73,112 வாக்காளர்களில் வெறும் 26,94,785 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    சென்னையில் 50% கூட வாக்குப்பதிவாகாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மக்களிடம் பேசுகையில் மக்கள் பல்வேறு காரணங்களை மக்கள் முன்வைக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்கள் என்பதால் வெளியூர் சென்றுவிட்டதாகவும், ஒரு சிலர் கவுன்சிலர் தேர்வு என்பதால் அதிக அளவில் அடிதடி பிரச்சனைகள் இருக்கும் என்பதால் வாக்களிக்கவில்லை என்கிறார்கள்.

    நகர்ப்புற உள்சென்னையில் மொத்தமாக உள்ள 200 வார்டுகளில் அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் வார்டு எண் 17 இல் உள்ள 4,157 வாக்காளர்களில் 3,516 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 84.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவெற்றியூர் மண்டலம் வார்டு எண் 1 இல் உள்ள 15,582 வாக்காளர்களில் 72.09 சதவீதம் அதாவது 11,233 வாக்குகளும், ஆலந்தூர் மண்டலம் வார்டு எண் 159 இல் உள்ள 3,191 வாக்காளர்களில் 2,272 வாக்காளர்கள் 71.20 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    ''அதிமுக முகவர்கள் விழிப்புடன் பணியாற்றி வெற்றிக் கனியை சமர்ப்பிக்க வேண்டும்'' : ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வலியுறுத்தல்

    மேலும் குறைந்தபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் வார்டு எண் 133 இல் உள்ள 28,461 வாக்காளர்களில் 31.01 சதவீத வாக்குகள் அதாவது 8,827 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    84.58% வாக்குப் பதிவாகியிருக்கும் 17வது வார்டில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வெறும் 4,157 என்பதால் அங்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai, Local Body Election 2022

    அடுத்த செய்தி