நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா தோல்வியடைந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திரு.வி.க.நகர் 6-வது மண்டலம் 72-வது வார்டில் சினிமா பிரபலம் கானா பாலா சுயேட்சையாக போட்டியிட்டார். கொரோனா காலத்தில் அப்பகுதிவாசிகளுக்கு கானா பாலா நிறைய உதவிகளை செய்திருந்தார். மேலும் கடந்த காலங்களில் இந்தப்பகுதியில் கானா பாலா சுயேட்சையாக களமிறங்கியிருந்தார். அந்த இரண்டு தேர்தல்களிலும் கானா பாலா இரண்டாம் இடம் பிடித்து இருந்தார். இந்தமுறை எப்படியும் வெற்றி வாய்ப்பு அவருக்கு சாதகமாக இருக்கும் என போட்டியிட்டார்.
சினிமாவுக்கு போய்விட்டால் இந்த ஏரியாவையும் மக்களையும் மறந்துவிட முடியுமா. இங்கதான் இருக்கேன். இந்த மக்களுக்கு சேவை செய்வதற்காக போட்டியிடுறேன் எனக் கூறியிருந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் திரு.வி.க. நகர் 72-வது வார்டில் போட்டியிட்ட கானா பாலா தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் சரவணன் 8303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கானா பாலாவுக்கு 6095 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.