முகப்பு /செய்தி /தமிழ்நாடு / லோன் ஆப் எனும் கொடூர அரக்கன்.. சிக்கித் தவிக்கும் இல்லத்தரசி - மிரட்டும் ஊழியர்கள் நடந்தது என்ன?

லோன் ஆப் எனும் கொடூர அரக்கன்.. சிக்கித் தவிக்கும் இல்லத்தரசி - மிரட்டும் ஊழியர்கள் நடந்தது என்ன?

லோன் ஆப் மோசடி

லோன் ஆப் மோசடி

லோன் ஆப்பில் பணத்தை கட்டிய பிறகும் பணம் கட்டச் சொல்லி குடும்பத்தலைவியை மிரட்டி வரும் பல்வேறு லோன் ஆப் ஊழியர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லோன் ஆப் ஆபத்து குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் 4 லோன் ஆப் ஊழியர்கள் தமிழகத்தில் முதன்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன், தாக்கம் குறைவதற்குள் சென்னையில் குடும்பத்தலைவி ஒருவரை பத்துக்கும் மேற்பட்ட லோன்ஆப் ஊழியர்கள் தொடர்ந்து மிரட்டியும் அவரது உறவினர்கள் போனுக்கு ஆபாசமாக மெசேஜ் செய்யும் கொடூர செயலில் இறங்கியுள்ளனர்.

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த இளம்வயது குடும்பத்தலைவி ஒருவர் அவசர குடும்பத்தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் 20 ம் தேதி Peony Cash App மூலம் ரூ.12 ஆயிரம் கடன் வாங்கியுளார். பின்னர், லோன் ஆப் ஊழியர்கள் அனுப்பிய UPI லிங்க் மூலம் அந்த கடனை பிப்ரவரி 27 ம் தேதி அன்று முழுவதுமாக கட்டியுள்ளார்.

ஆனால், பணம் கட்டவில்லை என்று கூறி அன்று மதியமே 880-1833-527107 என்ற எண்ணில் இருந்து அப்பெண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது. பணம் முழுவதும் செலுத்திவிட்டதாக அவர் கூறியும் லோன் ஆப் ஊழியர் ஆபாசமான பேசி மெசேஜ் செய்துள்ளார்.

Also Read: Theni Murder | கள்ளத்தொடர்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி.. தந்தையை மகனே கொன்றது விசாரணையில் அம்பலம்

ஆபாசமாக மெசேஜ் வந்ததைத் தொடர்ந்து அப்பெண் இனி ஆபாசமாக பேசினால் போலீஸில் புகார் அளித்துவிடுவதாக கூறியுள்ளார். அதற்கு லோன் ஆப் ஊழியர் போலீசிடம் புகார் அளிப்பாயா? எனக்கூறி அப்பெண்ணின் மொபைலில் இருந்த அவரது உறவினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்களின் மொபைல் எண்களை ஹேக் செய்து அப்பெண்ணுக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் 5 நிமிடத்தில் பணம் வரவில்லை என்றால் உனது மொபைலில் இருக்கும் அனைவரையும் சேர்த்து வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதில் உனது போட்டோக்களை மார்பிங் செய்து Call Girl என பதிவிட்டுவிடுதாக கூறி 5 நிமிடங்கள் கழித்து சொல்லியது போலவே வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அப்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து Call girl என பதிவிட்டுள்ளனர்.

இதனைப்பார்த்த அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள் அதிர்ந்து போய் அப்பெண்ணுக்கு கால் செய்து விசாரிக்க அப்பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு அப்பெண் மொபைல் போனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டு இரு தினங்களுக்கு முன் மொபைல் போனை ஆன் செய்ய  10 க்கும் மேற்பட்ட லோன் ஆப்களிலிருந்து தங்களிடம் வாங்கிய கடனை செலுத்த சொல்லி ஆபாசமாக பேசியுள்ளனர்.

Also Read:  தனுஷ் பட வசனத்தால் எஸ்.ஐ கடுப்பு.. மிரட்டிய போலீஸ்..! தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அப்பெண் தெரிவிக்க, தற்கொலை செய்துகொள் எனவும் ஆனால் அதற்கு முன் தங்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொள்ளும் படியும் 10 க்கும் மேற்பட்ட லோன் ஆப்களிலிருந்து மிரட்டியுள்ளனர்.

மேலும், அபெண்ணின் உறவினர்களுக்கு அவர் ஒரு Cheaper and Theif  என வேறு வேறு எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அனுப்பியும், மார்பிங் செய்யப்பட்ட அப்பெண்ணின் புகைப்படங்களையும் அனுப்பி வருகின்றனர். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான அப்பெண் செய்வதறியாது திகைத்துபோயுள்ளார். லோன் ஆப் மோசடி குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் பலரது வாழ்க்கை இன்னலுக்கு உள்ளாகிவிடும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chennai, Crime News, Cyber crime, House wife, Loan app, Loan applications, Online crime, Sexual abuse, WhatsApp