Home /News /tamil-nadu /

மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர்.. யூத் வேடத்தில் ஏமாற்றிய 56வயது போலீஸ்காரர்

மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூ கெதர்.. யூத் வேடத்தில் ஏமாற்றிய 56வயது போலீஸ்காரர்

சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்

சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்

மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற பெண்ணிடம் இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  56-வயதான சிறப்பு உதவி ஆய்வாளர், தன்னை ஒரு யூத் ஆக காட்டி, ஏமாற்றி லிவிங் டூ கெதரில் வாழ்ந்து தன்னை ஏமாற்றியதாக மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி புகார் தெரிவித்துள்ளார்.

  சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். இவர் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தருணத்தில்  காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சமூக ஆர்வலரான இவர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சியில் வீடு ஒன்றை வங்கி மூலம் வாங்கியுள்ளார். வாங்கிய பிறகுதான் தெரிந்துள்ளது. அந்த வீடு மீது ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று.

  Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

  பின்னர் தன்னை ஏமாற்றிய வங்கி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
  வசதி படைத்த அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.
  இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்து இருப்பதாகவும் அதனால்தான் இழப்பு ஏற்பட்டதாக கூறிய ஆண்ட்ரூஸ் அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்து சென்றுள்ளார்.

  தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு அழகியை ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மிகவும் அக்கரை காட்டி, உடன் இருந்து நன்றாக பார்த்துக்கொண்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். சாத்தானை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி சிறப்பு பிராத்தனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பின்னர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் மிஸ் தமிழ்நாடு அழகியை விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் அவரது வீட்டார்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறிள்ளனர்.

  Also Read: பேசிட்டிருக்கோம்ல... குறுக்க என்ன பேச்சு... கட்சி வேட்பாளர் கணவரின் கன்னத்தில் பளார் பளார்.. போலீஸ் முன் திமுக நிர்வாகி ஆவேசம்

  ஆண்ட்ரூஸீற்கு வயது அதிகமாக இருக்கும் போல என்று அவரது வீட்டாரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவரது வீட்டார்கள் 42 வயது தான் ஆகிறது அதிக நேரம் வெயிலில் பணிபுரிவதால் அப்படி தெரிகிறது என்று கூறி சமாளித்து உள்ளனர். அந்தப் பெண்ணிடமிருந்து சொத்து பத்திரங்கள், நகைகள், வங்கி கணக்கில் இருந்த பணம் என ஒவ்வொன்றாக சாமார்த்தியமாக ஆண்ட்ரூஸ்ஸ் கைப்பற்றிக் கொண்டதாகவும், வாடகை வீடு ஒன்றை பார்த்து அந்த பெண்ணை தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

  அந்த வீட்டில் இருந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு மிஸ் தமிழ்நாடு அழகியிடம் கிடைத்துள்ளது. அதில் ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும் அவருடைய உண்மையான வயது ஐம்பத்தி ஆறு (56) என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அந்தபெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் வசிக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது அவர் உதவி ஆய்வாளர் இல்லை என்பதும் அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.

  தன்னிடம் வயது குறைவு என்று கூறி நம்பவைத்து ஏமாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இருவரிடம் விசாரணையை துவக்கினர். விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளரான ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வயதை குறைத்து அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

  பள்ளிக்கரணையில் மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற பெண்ணிடம் இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.வழக்கு பதிவு செய்ததோடு நிறுத்திக்கொண்ட பள்ளிகாரணை போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் காவல்துறை உயர்அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றனர்.

  செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன்
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cheating, Cheating case, Crime News, Police, Tamilnadu, Youths

  அடுத்த செய்தி