சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்த ஆண், பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஆண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெரியமேடு அடுத்த சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் (40) மற்றும் இளைச்சி(35) ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து தீயை அணைத்து விசாரணை மேற்கொண்டதில் இளைச்சி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க - காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸி கடையில் புகுந்து நகையை பறித்த பெண்.. பரபர வீடியோ!
மேலும், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தீப் ஜெயினை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க - தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்
இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News