விடிய விடிய மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலில் உள்ள பொருட்களையும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் உடைத்த வழக்கறிஞர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள courtyard hotel க்கு நேற்று இரவு வந்த நபர் ஒருவர், மது அருந்தியுள்ளார். அதிகாலை வரை அங்கு அறையெடுத்து மது அருந்திய அந்த நபர், காலையில் தான் செல்வதாகக் கூறி அறையை காலி செய்து கிளம்பியுள்ளார்.
ஹோட்டல் ஊழியர், அறை எடுத்து தங்கியதற்கும் விடிய விடிய மது அருந்தியதற்கும் உண்டான பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்நபர் தன்னிடம் பணம் இல்லையென்றும் அடுத்த முறை வரும்போது தருவதாகவும் கூறியுள்ளார்.
Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி
ஹோட்டல் ஊழியர் பணத்தை கொடுத்து விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அந்நபர் தன்னிடமே பணம் கேட்கிறாயே எனக் கூறி விடுதியில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார். மேலும், ஊழியர்களை பிடித்துத் தள்ளிவிட்டு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வருவதை அறிந்த அந்நபர் மீண்டும் அறையிலிருந்து வெளியே வந்து ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஐந்து கார்களின் கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத பாஜக வேட்பாளர்கள் - அண்ணாமலை பேச்சு
விசாரணையில், அவர் செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் டைட்டஸ் என்பது தெரியவந்தது. டைட்டஸ் தான் செல்லும் இடங்களிலெல்லாம் இதேபோன்று பணம் தராமல் ஏமாற்றி பிரச்சினையில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டவர் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரத்தில் இதுபோன்று ஒரு சம்பவத்தில் பிரச்சினையில் ஈடுப்பட்டு விழுப்புரம் போலீசாரால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், செஞ்சி காவல்நிலையத்தில் அடிதடி வழக்கு இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து டைட்டஸை கைது செய்த தேனாம்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.