ஒன்றரை ஆண்டாக ஊதியம் வழங்கவில்லை - லதா ரஜினிகாந்த்தின் ஆஸ்ரம் பள்ளி ஊழியர்கள் போராட்டம்

பள்ளி ஊழியர்கள் போராட்டம்

ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் தரவில்லை என்று லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியின் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

  • Share this:
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள் இன்று பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், ’கொரொனோ  காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் தங்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினர். ஊதியம் குறித்து கேட்டால் தொடர்ந்து இழுதடிப்பதாக குற்றம்சாட்டிய  பள்ளி ஊழியர்கள், தாங்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published: