Home /News /tamil-nadu /

Kushboo | திமுக அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது.. பாஜக பாடம் புகட்டும் - குஷ்பு

Kushboo | திமுக அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது.. பாஜக பாடம் புகட்டும் - குஷ்பு

குஷ்பு

குஷ்பு

மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக , தங்களுக்கு வருமானம் கிடைக்கும் சுங்கச்சாவடி போன்ற விசயங்களில் மட்டும் மத்திய அரசிடம் குரல் கொடுக்காமல் கடிதம் மட்டும்தான் கொடுப்பார்களா, என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
புதிதாக அமைந்த திமுக அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது, இனி திமுகவிற்கு பாஜக பாடம் புகட்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் நடிகை குஷ்பு பாஜக கொடியை ஏற்றிவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , " 1980 ல் பாஜக தொடங்கப்பட்டது,  மக்கள் இன்று வரை பாஜக மீது நம்பிக்கையுடன் இருக்கின்றனர். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக கொடி இருக்கிறது. ஏதாவது வேலை செய்வதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில்  வெளிநடப்பு செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு கஷ்டமான விசயம்தான், ஆனால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்கிறது , கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்கிறது.  எந்த கட்சியாக இருந்தாலும்  ஆட்சியில் இருக்கும்போது விலையை உயர்த்த கூடாது என்றுதான் நினைப்பார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு உலகில் எந்த நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து  பேசவில்லை, இந்தியாவில்தான் பேசுகின்றனர். உலகளவில் பொருளாதார மந்தம் இருக்கிறது. இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதாக கூறுகின்றீர்கள் , ஆனால்  இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம். 7 ஆண்டுக்கு முன்பு வெங்காயம், தக்காளி விலை என்ன? இன்று எப்படி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, இந்தியாவில்  வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல்துறை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசு சொத்து வரியை 150 விழுக்காடு உயர்த்தியது தவறு , 8-ம் தேதி அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

திமுக மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி தங்களது திட்டங்களாக கூறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால்  நல்லது நடந்தால் அதை தங்களது திட்டம் என்று கூறிக்கொள்கின்றனர் , ஆனால் சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசை காரணம் சொல்கின்றனர் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

Also read... Chennai Power Cut: சென்னையில் இன்று (06-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

திமுக தலைமையில் அமைந்த புதிய அரசின் 6 மாத தேனிலவு காலம் முடிந்துவிட்டது, இனி பாஜக திமுகவிற்கு பாடம் புகட்டும்.  மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம், உண்மையை பேசுவதால்  அண்ணாமலை தைரியமாக செயல்படுகிறார்.
நாட்டுக்கு நல்லது செய்யும்போது பிரச்னைகள் வருவது இயல்புதான், விவசாயிகள போராட்டத்தை தாண்டி பாஜக வெற்றி பெற்றது என்று குஷ்பு கூறினார்.

மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுக , தங்களுக்கு வருமானம் கிடைக்கும் சுங்கச்சாவடி போன்ற விசயங்களில் மட்டும் மத்திய அரசிடம் குரல் கொடுக்காமல் கடிதம் மட்டும்தான் கொடுப்பார்களா, என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, DMK, Kushboo

அடுத்த செய்தி