• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாயமான தனியார் நிறுவன ஊழியர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு.. நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

மாயமான தனியார் நிறுவன ஊழியர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு.. நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

குன்றத்தூர் கொலை

குன்றத்தூர் கொலை

குன்றத்தூர், நத்தம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மாயமான சிலம்பரசனை கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக நண்பர்கள் போலீஸில் தெரிவித்தனர்.

  • Share this:
    குன்றத்தூரில் காணாமல் போன நபர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி, அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன்(33), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரது மனைவி குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அவரது நண்பர்களிடம் விசாரிக்க முயன்றபோது தலைமறைவானவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது தான் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்த வருண்(19), குன்றத்தூர் சேர்ந்த விக்னேஷ்(21), பிரவீன் குமார்(21 ), கோவிந்தராஜ்(23), ஆகிய 4 பேரை நேற்று குன்றத்தூர் போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ரவி(என்ற)சிக்கா ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது குன்றத்தூர், நத்தம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சிலம்பரசனை கொலை செய்து புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    Also Read : பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் - அண்ணாமலை

    இதையடுத்து உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய குன்றத்தூர் தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதன் பேரில் உதவி கமிஷனர்கள் பழனி, முத்துவேல் பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பரத் ஆகியோர் தலைமையில் சுடுகாட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் கொலையாளிகள் அடையாளம் காட்ட கொலை செய்யப்பட்ட சிலம்பரசன் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி (என்ற) சிக்கா ரவிச்சந்திரன் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. கஞ்சா விற்பனையும் செய்து வருவதாகவும் இவருக்கு எதிராளியானவர் சிவா. இருவரும் கஞ்சா விற்பனை செய்து வருவதால் தொழில் போட்டி இருந்து வந்ததுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் யார் முந்தி கொண்டு கொலை செய்வது என்று முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் குன்றத்தூர் வந்து விட்டதாகவும், சிவாவும், சிலம்பரசனும் நண்பர்கள் என்பதால் சிலம்பரசன் மூலமாக ரவிச்சந்திரனை தீர்த்துக் கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அறிந்த ரவிச்சந்திரன், சிலம்பரசனை நைசாக பேசி அழைத்து வந்து சுடுகாட்டில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பின்னர் அவரது உடலை அங்கு ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த உடலின் மேல் இருந்த மணல்மேட்டை அகற்றிவிட்டு சிலம்பரசன் உடலை அதில் புதைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. மேலும் சிலம்பரசன் மாலை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொழில் போட்டி காரணமாக யார் முதலில் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டுவது என்ற முன் விரோதத்தில் முந்திக்கொண்டு சிலம்பரசனை தீர்த்து கட்டியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிலம்பரசன் உடலை தோண்டி எடுக்கப்பட்ட இடத்திலேயே செங்கல்பட்டு அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து சிலம்பரசன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: