வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஜேசிபி வைத்து அபார்ட்மெண்ட் சுற்றுச்சுவர் இடிப்பு.. சென்னையில் அடாவடி சம்பவம்..
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஜேசிபி வைத்து அபார்ட்மெண்ட் சுற்றுச்சுவர் இடிப்பு.. சென்னையில் அடாவடி சம்பவம்..
ஜேசிபி வைத்து அபார்ட்மெண்ட் சுற்றுச்சுவர் இடிப்பு
Chennai | கோவூர் அருகே ஜேசிபி எந்திரம் கொண்டு சுவர்களை இடித்து தள்ளும் சிசிடிவி காட்சிகள்,குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
சென்னை அடுத்த கோவூர் ,பெரியணிச்சேரி பஞ்சாயத்து சத்யா நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 2 சுற்று சுவர்களை ஜெயச்சந்திரன் என்பவர் ஆட்கள் மூலம் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளியதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த குடியிருப்பை சுற்றி வெளியாட்கள் உள்ளே வராத வண்ணம் குடியிருப்பு சார்பில் மூன்று சுற்று சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குடியிருப்பின் அருகே ஜெயசந்திரன் என்பவருக்கும் நிலம் உள்ளது. இந்த நிலையில் ஜெயச்சந்திரன் இந்த சுற்று சுவரை அகற்றி இந்த வழியாக நாங்கள் சென்று வர வேண்டும் என குடியிருப்புவாசிகள் இடம் கேட்டுள்ளார்.
அதற்கு குடியிருப்புவாசிகள் மறுப்பு தெரிவித்த நிலையில் அது தொடர்பான புகார் அளிக்கப்பட்டு அந்த புகார் நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஜேசிபி எந்திரம் கொண்டு குடியிருப்பின் இரண்டு சுவர்களை இடித்து தள்ளும் சிசிடிவி காட்சிகள் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு குடியிருப்புவாசிகள் மாங்காடு காவல்துறையினருக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அது தொடர்பாக மாங்காடு போலீசார் புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கையில், தங்களுக்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அதன் வழியே சென்று வரவேண்டும் என ஜெயச்சந்திரன் என்பவர் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் பாதுகாப்பாக இருந்து வந்த இரண்டு சுற்று சுவர்களை இடித்து தள்ளி அதன் மூலம் பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட மற்றும் சமூக விரோதிகள் உள்ளே வரவும் கூடும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சோம சுந்தரம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.