உன் மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பவா?.. கணவனுக்கு போன் செய்த கால்டாக்ஸி டிரைவர் –அதிர்ச்சியில் உறைந்த பெண்
உன் மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பவா?.. கணவனுக்கு போன் செய்த கால்டாக்ஸி டிரைவர் –அதிர்ச்சியில் உறைந்த பெண்
கைதான கால்டாக்ஸி டிரைவர்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் கணவனுக்கு போன் செய்து உன் மனைவி என்னிடம் பேசாவிட்டால் தனிமையில் இருந்த வீடியோவை அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
சென்னை சேர்ந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கால்டாக்ஸி டிரைவர் அதனை வீடியோ எடுத்து கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டிய விவகாரத்தில் பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த 31 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அரும்பாக்கத்தில் தங்கியுள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் பொறியாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினரில் திருமண நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளார். 3 நாட்கள் கொல்கத்தாவில் தங்கி திருமண நிகழ்வில் பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார். கொல்கத்தாவில் தங்கியிருந்த நாள்களில் கால்டாக்ஸி டிரைவர் சகாபுதீன் சகி என்பவர் அறிமுகமாகியுள்ளார். முதல் நாளே மிகவும் கனிவுடன் அந்த நபர் பேசியதால் அடுத்தடுத்த நாள்களில் வெளியே செல்லும்போது அதேநபரை அழைத்துள்ளார்.
சென்னை திரும்பிய சில நாள்களில் அந்தக் கால்டாக்ஸி டிரைவர் அந்தப்பெண்ணை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் மகன் குறித்து அக்கறையுடன் விசாரித்து வந்துள்ளார். இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். மகனை பார்க்க வேண்டும் எனக் கூறி அந்த நபர் சென்னை வந்துள்ளார். சென்னையில் மனிஷாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்துவைத்து அந்தப்பெண்ணை மிரட்ட தொடங்கியுள்ளார். வீடியோவை வெளியிட்டுவிடுவேன் எனக்கூறி அடிக்கடி பணம் கேட்டி மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபரால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் அந்த நபரின் செல்போன் நம்பரை ப்ளாக் செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சென்னைக்கு நேரில் வந்து அந்தப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது செல்போனை பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அந்த பெண்ணின் கணவனுக்கு போன் செய்து உன் மனைவி என்னிடம் பேசாவிட்டால் நாங்கள் தனிமையில் இருந்த வீடியோவை உனது உறவினருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சில வீடியோக்களை அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப்பெண்ணை விட்டு அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
மேலும் அந்தப்பெண்ணை தொடர்புக்கொண்ட கால் டாக்ஸி டிரைவர் நீ என்னிடம் பேசவில்லை என்றால் இந்த வீடியோவை உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்தப்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கொல்கத்தாவை சேர்ந்த அந்த கால் டாக்ஸி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.