மோசடி வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது.. உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் கைது எப்போது?..

மோசடி வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது.. மேஜிஸ்ட்ரேட் குடியிருப்பின் முன்பு ஸ்ரீயின் அடியாட்கள் நியூஸ் 18 செய்தியாளரின் கேமராவை சேதப்படுத்தி கொலை மிரட்டல்!

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.

  • Share this:
கடந்த 2019 ஆம் ஆண்டு அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு  இந்த புகாரை சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர்.

தமிழக டிஜிபி இந்த புகார் குறித்த முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரியவந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவகுமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Also read: கம்யூனிஸ்ட் கட்சியினரின் துண்டுதல் பேரில் பொய் புகார்; சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மனைவி புகார்

போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளைத் தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர்.
Published by:Esakki Raja
First published: