முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.
ஸ்டாலின் (CM MK Stalin) 5 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தென்
சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது அதை 1000 படுக்கைகள் ஆக அதிகரித்தது ம் கட்ட இருப்பதாக தெரிவித்தம் நிலையில், கிங்ஸ் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு (Kings Multi Speciality Hospital) இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக வளாகத்தில், பன்னோக்கு மருத்துவமனை (Kings Multi Speciality Hospital) கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாயில் கட்டுமானப் பணிகள் மற்றும் மீதமுள்ள 50 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளனர்.
Also Read : பால் குடத்துடன் சென்ற இந்துக்கள்.. போராட்டத்தை நிறுத்தி வழிவிட்ட இஸ்லாமியர்கள்
ஏற்கனவே சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை உள்ள நிலையை தென் சென்னைக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க முதல்வர் அறிவித்து இருந்தார்.
இந்த மருத்துவமனைக்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்டதாக 5,53,582 சதுர அடி கொண்ட கட்டிடமாக கட்டப்படவுள்ளது.
மேலும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பு மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் சிகிச்சை பிரிவு,ரத்தக்குழாய் சிகிச்சை, ஆர்த் ரோஸ்கோபி மற்றும் ஸ்கேன், ஆராய்சி பிரிவு, மிகப்பெரிய மருந்தகம் என பல்வேறு வசதிகள் மட்டுமல்லாது மருத்துவமனையுடன் மருத்துவ கல்லூரிகளும் உள்ளது. அதேப்போல, மருத்துவ வசதிகளுடன் கூடிய பன்னோக்கு மருத்துவமனை கட்ட உள்ளன, இதற்கான அடிக்கலை முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.