Home /News /tamil-nadu /

சிங்காரச் சென்னை 2.0 : கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு

சிங்காரச் சென்னை 2.0 : கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு

 கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு

கத்திப்பாரா நகர்புற சதுக்கம் திறப்பு

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள "கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ் காலியாக உள்ள 5 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு, சென்னை நகரின் அடையாளத்தையும் கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டு உள்ளது.

    Also Read : பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

    நகர்ப்புற சதுக்கம் 4 மண்டலங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது . கைவினைப் பொருட்கள் சந்தை, உணவகங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் உட்பட இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. வணிக வளாகத்தில் மொத்தம் 56 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையும் 200 முதல் 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. இதில் 18 கடைகள் உணவு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அத்துடன், ஒரே நேரத்தில் 128 கார்கள், 340 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்வையாளர்களுக்கு போதிய அளவு வாகன நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    Also Read : யார் விலகினாலும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் - அண்ணாமலை அதிரடி

    ஜிஎஸ்டி சாலையை 100 அடி சாலையுடன் இணைக்கும் பேருந்துகளின் இயக்கத்தை எளிதாக்கும் வகையில், தற்போது வாகன சுரங்கப்பாதை மேம்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற சதுக்கத்தின் முழுப் பகுதியும் சூரியசக்தி விளக்குகள், நிலப்பரப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் உயர்கம்ப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



    கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நகர்ப்புற சதுக்கத்திற்கான பணிகள், 2018ம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகள் அனைத்தும் அண்மையில் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பேட்டரி காரில் பயணித்த முதல்வர், சதுக்கத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். இந்த சதுக்கத்தில் பேருந்து நிறுத்தம், வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தமிழ் எழுத்துகள் நிறுவப்பட்டுள்ளன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Guindy

    அடுத்த செய்தி