நடிகர்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார், அவருடன் எப்போதும் துணை நிற்பேன் அவர் என்னுடைய நண்பர் என தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் கராத்தே தியாகராஜன். அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு ஆதரவான கருத்துகளை தெரிவிப்பார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் கராத்தே தியாகராஜன்
பாஜகவில் இணைந்தார்.
தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக கட்சிப் பணிகளில் ஈடுபடும் கராத்தே தியாகராஜன், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு களப்பணி ஆற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை நங்கநல்லூரில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசும்பொழுது, பிரசாந்த் கிஷோரை வைத்து, அந்த அண்ணாமலையை சரி கட்டி விட்டீர்கள் ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையை உங்களால் சரிக்கட்ட முடியாது என்று கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வேறு ஒரு முகம் இருக்கிறது ஒரு முகத்தை தான் தற்போது நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என திமுகவை எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில்தான் பணப்பட்டுவாடா நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள் இருப்பதால் இன்று இரவிலிருந்து பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் ஆனால், அதை தடுப்பதற்கு அண்ணாமலை பல வழிமுறைகளை கூறியிருக்கிறார் அதனை பின்பற்றி பணப் பட்டுவாடாவை நாம் தடுப்போம் எனவும் பேசினார்.
Must Read : பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு... ஆர்.எஸ்.பாரதி தகவல்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை பிரசாந்த் கிஷோர் வைத்து சரிகட்டி விட்டீர்கள் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் விட்டு விலகும் பொழுது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ரசிகர்களிடம் கடிதம் எழுதிய நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரான கராத்தே தியாகராஜன் இது போன்ற கருத்தை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து
இங்கே க்ளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.