சென்னை பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் புகார் விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

கனிமொழி

சென்னையிலுள்ள பத்ம சோஷத்ரி பால பவன் பள்ளியில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க எம்.பிக்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளனர்.

  • Share this:
    சென்னை கேகே நகரில் அமைந்துள்ள பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள முக்கியப் பள்ளியில் பாலியல் புகார் எழுந்தது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்த தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.




    இதுகுறித்த தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ட்விட்டர் பதிவில், ‘சென்னை - கே.கே.நகரிலுள்ள #PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம், குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து, இத்தகைய முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மத்திய - மாநில பள்ளிக் கல்வித்துறையினர், இதில் உரிய விசாரணை செய்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உறுதி செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: