• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவனின் ஜீவசமாதி ஆசை... மண்ணை அள்ளி போட்டு மூடிய மனைவி

கணவனின் ஜீவசமாதி ஆசை... மண்ணை அள்ளி போட்டு மூடிய மனைவி

குற்றம்

குற்றம்

சென்னை அருகே, நெஞ்சு வலியால் அவதிப்பட்ட கணவன் தான் ஜீவசமாதியாக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததால், உயிருடன் இருந்த அவர் மீது மண்ணை அள்ளிப் போட்டுப் புதைத்துள்ளார் மனைவி.

  • Share this:
    சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகராஜ். இவரது மனைவி 45 வயதான லட்சுமி. இத்தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்; மகன் துபாயில் பணிபுரிகிறார். மகள் 25 வயதான தமிழரசி, தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 17ம் தேதி இரவு, பணி முடித்து வீட்டிற்கு வந்த மகள் தமிழரசி, தந்தை எங்கே என்று கேட்டுள்ளார். அவர் வெளியில் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார் தாய் லட்சுமி. மறுநாளும் தமிழரசி கேட்டதற்கு அதையே கூறியுள்ளார் லட்சுமி. தொடர்ந்து 19ம் தேதி தமிழரசி தந்தை பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதுதான் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

    கடந்த 17ம் தேதி இரவு நாகராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை அழைத்த அவர் தான் ஜீவசமாதியாக வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து வீட்டின் பின்புறம் தென்னை மரத்தின் அருகே உள்ள குழியில் சென்று படுத்துக் கொண்டதாகவும், அவர் மீது மண்ணைப் போட்டு மூடி விட்டதாகவும் தாய் லட்சுமி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தமிழரசி, இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்

    பள்ளிக்கரணை போலீசார் நாகராஜின் வீட்டிற்கு சென்று அவரது உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், லட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: