மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் இயக்குனர் மகேஷன் காசிராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.