• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: ஒரு நாள் மழைக்கே தி.மு.க அரசு திண்டாடுகிறது - ஜெயக்குமார் விமர்சனம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை: ஒரு நாள் மழைக்கே தி.மு.க அரசு திண்டாடுகிறது - ஜெயக்குமார் விமர்சனம்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தி.மு.க அரசு ஒருநாள் மழைக்கே திண்டாடுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுள் சிக்கி மரணமடைந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகினார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார்.

மேலும் ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நேரில் ஆய்வு செய்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடுகிறது பெருமழைக்கு  இவர்கள் எவ்வாறு தாக்கு பிடிப்பார்கள். திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள். அதனால் தான்  இன்று மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மழை வெள்ள காலங்களில் அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால் திமுக அரசு மந்தமாக உள்ளது. கடந்த டிசம்பரில் எங்கும் இந்த அளவுக்கு நீர் தேங்கவில்லை. தற்போது ஆங்காங்கே இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு என்றும் விடியாத அரசாகவே இருக்கிறது.

அதிமுகவை மீட்டெடுப்பது தான் என் குறிக்கோள் என்று தினகரன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் கதைதான் இது. ஒருக்காலும் அவர் அதிமுகவை மீட்டெடுக்க முடியாது. ஜெயலலிதாவே, டி.டி.வி.தினகரனை போயஸ் தோட்டம் பக்கமே வரக்கூடாது என்று துரத்தினார். அவர் கனவு என்றும் பலிக்காது என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஆடு தொட்டி பகுதி மக்களுக்கு மதிய  உணவு வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: