வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல்
சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர்
மழை பெய்து வருகிறது. நகரின் மையப்பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூர் துறைமுகம் பகுதியில், 14.6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எம்.ஆர்.சி.நகரில் 12 சென்டிமீட்டர் அளவுக்கும், வில்லிவாக்கத்தில் 10 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. தரமணியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.