• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை: அண்ணாமலை விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை: அண்ணாமலை விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை: அண்ணாமலை விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை: அண்ணாமலை விமர்சனம்

வரும் பட்ஜெட்டில் மீனவர்கள் வாக்குறுதி இடம்பெறவில்லை என்றால் அடுத்த போராட்டம் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு நடைபெறும் என்று அவர் கூறினார்.

  • Share this:
தேர்தலில் மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாஜக மீனவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

Also read: கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை... ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

முன்னதாக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசுகையில்,
ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்கள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றாத கையாலாகாத அரசு என விமர்சனம் செய்தார்.

பின்னர் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் தானே ஆகிறது ஏன் போராட்டம் என சிலர் கேட்கலாம், ஆனால் ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் தடை காலத்தில் 5000 என்ற உதவி தொகையை 8000மாக தருவதாக கூறினர் அது எங்கே?

வாக்குறுதி என்பது காலகாலத்தில் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படை 464 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் பாஜக ஆட்சியில் ஒருவரை காட்டுங்கள்.. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பத்திரமாக வருவார்கள் என்ற நம்பிக்கை மோடி ஆட்சியில் தான் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொன்ன வாக்குறுதி தாண்டி அதிகம் திட்டத்தை கொண்டு வந்தது பாஜக. ஆனால் ஆட்சி அமைத்து 83 நாட்கள் ஆகியும் ஏன் நிறைவேற்றவில்லை. வரும் பட்ஜெட்டில் மீனவர்கள் வாக்குறுதி இடம்பெறவில்லை என்றால் அடுத்த போராட்டம் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு நடைபெறும் என கூறினார்.

இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: