சென்னை தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET Corporation) சார்பில் தமிழ்நாட்டில் பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டம் (BharatNet Pase-II) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், இன்றைய தினம் ஐடி துறையின் மைல் கல்லாக பார்கிறோம். பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏற்கனவே பாரத் நெட் மூலம் 2 பேக்கேஜ் Roll out செய்து பணிகள் தொடங்கப்பட்டது. இன்று 509 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பேக்கேஜ் Roll Out செய்யப்பட்டுள்ளது. விரைவில் 4-ஆவது பேக்கேஜ் Roll out செய்யப்படும். இன்று Roll Out செய்யப்பட்ட பேக்கேஜ் மூலம் ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சி, கிராமங்களில் பணிகள் முடிவுக்கு வரும். இதனால் 12,525 கிராமங்களுக்கு இணைய வசதிகள் கிடைக்கப்பெறும் என குறிப்பிட்டார். ஒட்டு மொத்தமாக 1,810 கோடி மதிப்பீட்டில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Also Read : கொரோனாவிலிருந்து மீண்ட ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் - மருத்துவமனை ஆய்வில் தகவல்
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இ-சேவை மையம் வீழ்ச்சியில் இருந்தது.புதிதாக அரசு பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 56 இ-சேவை வசதிகள் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எங்குல்லாம் இ-சேவை மையங்கள் இல்லையோ அங்கு இசேவை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இ-சேவை-யில் பணி செய்ய பயிற்சி கொடுத்து முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.