Home /News /tamil-nadu /

சென்னையில் 6 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் 6 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

சென்னையில் தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னையில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

    ஒமைக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி 162 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது 19ஆம் தேதி 129 ஆகவும், 25ம் தேதி 165 ஆகவும், நேற்று முன்தினம் 194 ஆகவும் அதிகரித்தது.

    ஒரே நாளில் 51 சதவீதம் அதிகரித்து நேற்று 294 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத ஒரு நாள் பாதிப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒன்றாம் தேதி 162-ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 350 ஆகவும், நேற்று 374 ஆகவும் அதிகரித்துள்ளது.

    மாநிலம் முழுவதும் ஆயிரத்து 250 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் 4 தெருக்களில் 6 முதல் 10 பேர் வரை தொற்றாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தெருக்கள் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஒட்டுமொத்தமாக 507 தெருக்களில் தொற்றாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தினசரி 10 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 19 ஆயிரமாக இருந்தாகவும், பின்னர் 22 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், தினசரி மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்க உத்தரவிட்டார்.

    Read More : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில், தீவிரமாக கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தினார். கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு முதல்கட்ட உடல் பரிசோதனை மேற்கொள்ளும் மையங்கள் 11 இடங்களில் தற்போது செயல்படும் நிலையில், இதனை இன்று முதல் 15 மையங்களாக அதிகரிக்க உத்தரவிட்டார்.

    Read More : ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை - காவல்துறையினர் அறிவிப்பு

    முதல்கட்ட உடல் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் 24 வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

    Must Read : மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 134 மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை முடிந்து செல்லும் நபர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி