Home /News /tamil-nadu /

தீபாவளி கொண்டாட்டம் : சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு  

தீபாவளி கொண்டாட்டம் : சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு  

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை தேனாம்பேட்டையில்  அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 181ஆக பதிவாகியிருக்கிறது.

    சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் மாசு அளவு 150  என்ற குறியீட்டை கடந்துள்ளதாக  மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மக்கள் வெடி வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சென்னையில்  பல்வேறு இடங்கள் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    சென்னை தேனாம்பேட்டையில்  அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 181ஆக பதிவாகியிருக்கிறது.

    அரும்பாக்கம் : 176

    வன்டலூர் : 125

    போரூர் : 122

    மணலி : 154

    இது மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆரோக்கியமான காற்று இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.காற்றில் கலந்திருக்கும் நுன் துகள்களின் எண்ணிக்கை அடிப்படையில் காற்றின் தரக்குறியீடு கணக்கிடப்படுகிறது

    00 - 50 வரை இருப்பின் ஆரோக்கியமானது

    51 - 100 வரை இருப்பின் மிதமான காற்று சுவாசிக்க ஏதுவானது.

    101 - 150  உடல்நலக்குறை ஏற்படுபவர்கள், சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிக்க உகந்த காற்று அல்ல

    151 - 200 ஆரோக்கியமான காற்று அல்ல.

    நேற்று ஒரு நாளில் வெடித்த பட்டாசு புகையால் இயல்பைவிட 20 மடங்கு காற்று மாசுடைந்துள்ளது. காற்று மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Air pollution, Chennai, Diwali, Diwali festival

    அடுத்த செய்தி