Home /News /tamil-nadu /

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமான வரித்துறை மனு

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமான வரித்துறை மனு

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

Madras High Court | சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், எதிர் மனுதாரர் பட்டியலிருந்து தங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

தயரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையிலான பிரச்சினையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதால், எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தங்களை  நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கான சம்பள பாக்கி  4 கோடி ரூபாயையும், தன்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதுவரை அவர் தயாரிக்கும் மூன்று படங்களுக்கு பணத்தை செலவிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், 20 கோடி ரூபாய் நஷ்டம், விநியோகிஸ்தர்களுடனான பிரச்சனை உள்ளிட்ட பல உண்மைகளை மறைத்து தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : தமிழால் இணைவோம்... சிம்பு, அனிருத் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், எதிர் மனுதாரர் பட்டியலிருந்து தங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Madras High court, Sivakarthikeyan

அடுத்த செய்தி